நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு… செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவு தொடர்பான குறித்த செயற்கைகோள் புகைப்படங்களை இஸ்ரோ தற்போது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் உருவாகி உள்ளது. நிலச்சரிவால் அடித்து செல்லப்பட்ட குப்பைகளின் ஓட்டம் ஆற்றின் போக்கை விரிவுபடுத்தி ஒரு பேரழிவை ஏற்படுத்தியதை இந்த படங்கள் விளக்குகின்றன.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு