நானி- பிரியங்கா மோகன் படத்தின் புதிய பாடல்!

நானி- பிரியங்கா மோகன் படத்தின் புதிய பாடல்! நானியின் சரிபோதா சனிவாரம் படத்தின் புதிய பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரிபோதா சனிவாரம் படத்தின் புதிய பாடல்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன.

நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் உல்லாசம் பாடல் ஜூலை 13ஆம் நாள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் பிரியங்கா மோகன் உடனான காதல் பாடலாக அமையுமென போஸ்டர் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரியங்கா மோகனின் தோற்றமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சாருலதா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்