நானி – 33 படத்தின் பூஜை!

நடிகர் நானியின் 33-வது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இறுதியாக வெளியான, ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் வெற்றிப் படமானது.

அடுத்ததாக, இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ஹிட் – 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தன் 33-வது படத்தில் நடிக்கிறார். படத்திற்குத் தற்காலிகமாக நானிஒடேலா – 2 எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: என்னுடைய ஆக்சன் படத்தை இன்னும் எடுக்கவில்லை: லோகேஷ் கனகராஜ்

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!