நாமக்கல் மாணவன் மரணம் – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு புகாரளித்த பெற்றோர்

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு உயிரிழந்த மாணவரின் பெற்றோர் புகார் மனுவை அளித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நவலடிபட்டியைச் சேர்ந்த ஆகாஷ்(16) என்ற மாணவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே எதனால் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து எருமபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த மாணவரின் பெற்றோர் புகார் அளிக்காததால் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விரைவில் பிரேத பரிசோதனை தொடங்க உள்ளது. உயிரிழந்த மாணவர் ஆகாஷை அடித்த மாணவர் உள்பட சக மாணவர்கள், கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்