நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் விலகியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருத்து விலகுகிறேன். நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சிப் பணிகளையும் சிறப்பாக செய்தேன். 2016-ல் முதன்முதலாக ஒரத்தூர் கினை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019-ல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர், 2021 விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆகவும் 2024 விழுப்புரம் மேற்கு மாட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சித் தேர்தல், இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நான் சிறப்பாக வேலை செய்தேன். இதில் உள்ளாட்சி தேர்தலைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டமோ எங்கள் தொகுதியோ சார்ந்தவர் கிடையாது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டிட நான்கு மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75 சதவீதம் வேட்பாளரை நிரப்பினோம்.

கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை திருப்பி அண்ணனிடம் கையோப்பழம் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம். இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருப்படுத்தும் படி இல்லை, இது அனைத்து பொறுப்பாளர்களுக்கும் சமம்.

அண்ணன் (சீமான்) கூறியது: இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக்கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார். பலமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருத்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் மேலும் 2026 தேர்தலுக்கு இப்பொழுதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன?.

அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்பது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் நாம் தமிழர் கடசியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

UP: BJP Corporator’s Son Marries Pakistan Woman In Online Nikah Ceremony In Jaunpur; Party MLC Attends Function

5 Essential Albums by Indian Guitarists You Need To Hear

Unlock Your Mind : When Chess Meets Visualisation, Math And Logic