நாய் மீது காரை ஏற்றியதை தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு அடி உதை

கார் ஓட்டுநரிடம் வண்டியை பார்த்து ஓட்டிச் செல்லக்கூடாதா என்று ஆசிரியர் கூறி உள்ளார்.

குன்றத்தூர்:

சென்னையை அடுத்த அனகாபுத்தூர், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் இம்தியாஸ். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அவ்வழியாக சென்ற கார் ஒன்று, தெருவில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த இம்தியாஸ், கார் ஓட்டுநரிடம், வண்டியை பார்த்து ஓட்டிச் செல்லக்கூடாதா என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், இம்தியாஸை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இம்தியாஸ் மற்றும் அவரை தாக்கிய கார் ஓட்டுநர் காட்டாங்கொளத்தூர், ஆலயம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நாய் மீது காரை ஏற்றியதை தட்டிக் கேட்ட ஆசிரியரை கார் டாக்ஸி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

பணி அழுத்தமா? அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணம்!

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா