நாளை மணிப்பூர் செல்கிறார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி

இன்னும் ஓயாத கலவரம்… நாளை மணிப்பூர் செல்கிறார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது வரை அங்கு இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது.

இந்நிலையில், நாளை மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி புதிதாக கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசுகிறார். அம்மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசும் ராகுல் காந்தி, மாநில ஆளுநர் அனுஷ்யா உய்கேவை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
தோனி முதல் அட்லீ வரை.. அனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வியெழுப்பியிருந்த நிலையில்
ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்ல உள்ளார். மணிப்பூரில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மூன்றாவது முறையாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Manipur
,
Rahul Gandhi

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து