நாளை முதல் தீர்ப்பளிக்க முடியாது.. ஆனால் : டி.ஒய். சந்திரசூட் பிரியாவிடை

புது தில்லி: யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், நாளை முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வுபெறப்போகும் டி.ஒய். சந்திரசூட் கூறியிருக்கிறார்.

நவ. 10ஆம் தேதியுடன் அவரது பணிக்காலம் நிறைவு பெற்றாலும், அன்றைய தினம், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், நடைமுறைப்படி, அவரது இறுதி பணி நாள் வெள்ளிக்கிழமையாகவே அமைந்துவிட்டது.

இதையும் படிக்க.. நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல் யார்? அம்பானியோ அதானியோ அல்ல!

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில், பங்கேற்று பேசிய டி.ஒய். சந்திரசூட், இந்த நீதிமன்றம்தான் என்னை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருந்தது. இதுவரை நாம் அறிந்திருந்தாத பல மனிதர்களை சந்திக்கிறோம், அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், முந்தைய வழக்கைப் போல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை. ஒவ்வொன்றும் புதிதாகவே இருக்கும்.

ஒருவேளை, யாரையேனும் நான் காயப்படுத்தியிருந்தால், அவர்கள் என்னை மன்னித்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வளவு பேர், பிரியாவிடை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கும் மனமார்ந்த நன்றி என்று உரையாற்றினார்.

வழக்கமாக ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அடுத்து வரும் புதிய தலைமை நீதிபதி முன்னிலையில் ஒரு சம்பிரதாய அமர்வை நடத்துவார்கள். அதனை வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்ற ஊழியர்கள் கேட்டதற்கு, இன்று என்னால் எத்தனை வழக்குகளை முடியுமோ அத்தனை வழக்குகளை விசாரிக்கிறேன், எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட விரும்பவில்லை என்றே கூறியதாக டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.ஒய். சந்திரசூட், தனது இறுதி உரையின்போது நீதிமன்றத்தில் ஏராளமானோர் இருந்ததால் ‘உணர்ச்சிவயப்பட்ட நிலையில்’ உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

“நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு காலியாக இருக்கும் என்று நேற்று இரவு, நான் யோசித்துக்கொண்டிருந்தேன் அப்போது திரையில் நானே என்னைப் பார்த்துக் கொள்வேன் என்றும். ஆனால், இங்கே நிறைந்திருக்கும் உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் பணிவாக உணர்கிறேன். நாம் இங்கு ஒரு பயணியைப் போலவும், குறுகிய காலத்திற்கு வந்துச் செல்லும் பறவைகளாகவும் இருக்கிறோம், நமக்குரிய வேலையைச் செய்துவிட்டு வெளியேறுகிறோம்”என்று அவர் உணர்ச்சிப்பொங்கக் குறிப்பிட்டார்.

Related posts

A Choice Between Rhetoric-Spewing Bombasts And Genuine Parliamentarians

Editorial: Death Threats And Extortion Back In Badlands

How To Gauge Consumer Spending This Time?