நிதின் கட்கரி சொன்ன நற்செய்தி – இனி எல்லாம் இலவசம்!

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை – நிதின் கட்கரி உறுதி

இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கணக்கிட்டால் சாலை விபத்துகளால் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், விபத்தில் படுகாயமடைந்து, நிரந்தரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், சாலை போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது. அத்துடன், விபத்துகளை தவிர்க்கவும், விபத்துகளால் ஏற்படும் மரணங்களை குறைக்கவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

அதில் ஒரு முக்கிய முயற்சியாக சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முதற்கட்டமாக சண்டிகர் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதை மத்திய அரசு சோதனை முயற்சியாக செய்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விளம்பரம்

விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் எங்கு சாலை விபத்து ஏற்பட்டாலும், அதில் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக இலவசமாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு அயுஷ்மான் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ரூ.1.5 லட்சம் வரையிலான மருத்துவ பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க:
பூமியில் மனிதர்கள் அழிந்தாலும், உயிர் வாழும் ஒரே விலங்கு இதுதான் – எப்படி தெரியுமா?

இந்த திட்டத்திற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கைகோர்த்துள்ளது. அதன்படி, மாநில அரசின் போலீசார் மற்றும் ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள மருத்துவமனைகள், மாநில சுகாதாரத்துறை மற்றும் தேசிய இன்பர்மேட்டிக் சென்டர் ஆகியவையும், ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலும் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த திட்டம் வெற்றிபெற்றால், விரைவில் திட்டமிட்டபடி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித செலவும் இல்லாமல் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வழி பிறக்கும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
accident case
,
central government
,
govt hospital
,
Nitin Gadkari
,
road accident
,
Treatment

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்