நிதி ஆயோக் கூட்டத்தில் ஆவேசமாக வெளியேறிய மம்தா பானர்ஜி.. நடந்தது என்ன?

நிதி ஆயோக் கூட்டத்தில் ஆவேசமாக வெளியேறிய மம்தா பானர்ஜி… நடந்தது என்ன?

மம்தா பேனர்ஜி

நிதி ஆயோக் கூட்டத்தில் இனிமேல் ஒருபோதும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்தியில் 3வது முறையாக பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவதால், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.

ஆனால் பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, இந்தியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதேவேளையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

விளம்பரம்

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசிக்கொண்டிருந்தபோது, மைக் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தார்.

இதையும் படிக்க:
பாஜகவில் புதிய செயல் தலைவர் பதவி – ஜெ.பி.நட்டாவிற்கு பணிச்சுமை குறைப்பு.. பிரதமர் மோடி, அமித்ஷா முக்கிய ஆலோசனை!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடங்கள் பேச அனுமதித்ததாகவும், தன்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்ததாகவும் கூறினார். இது மாநில கட்சிகளை அவமதிக்கும் செயல் என்றும், இனி ஒருபோதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், இது தான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படி தான் நடத்துவதா? எதிர்கட்சிகளும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிரிபோல நினைத்து அவர்களின் குரலை ஒடுக்க நினைக்கக்கூடாது. ஒரு கூட்டாட்சிக்கு அனைத்து தரப்புகளின் குரல்களுக்கும் மரியாதையளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Is this #CooperativeFederalism?
Is this the way to treat a Chief Minister?
The Union BJP government must understand that opposition parties are an integral part of our democracy and should not be treated as enemies to be silenced.
Cooperative Federalism requires dialogue and… https://t.co/Y6TKmLUElG

— M.K.Stalin (@mkstalin) July 27, 2024

விளம்பரம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டிற்கு மத்திய அரசின் PIB Fact Check இந்த விவகாரம் தவறாக வழிநடத்தப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

விளம்பரம்

அந்த எக்ஸ் பதிவில், “மம்தா பானர்ஜியின் மைக் அணைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த தகவல் தவறாக வழிநடத்தப்படுகிறது.

It is being claimed that the microphone of CM, West Bengal was switched off during the 9th Governing Council Meeting of NITI Aayog#PIBFactCheck
▶️ This claim is #Misleading
▶️ The clock only showed that her speaking time was over. Even the bell was not rung to mark it pic.twitter.com/P4N3oSOhBk

— PIB Fact Check (@PIBFactCheck) July 27, 2024

விளம்பரம்

மேலும் மம்தா பானர்ஜியின் நேரம் முடிவடைந்துவிட்டதாக மட்டுமே கடிகாரம் மூலம் கட்டப்பட்டதாகவும், அவரின் நேரம் முடிவடைந்துவிட்டதாக மணி கூட ஒலிக்கப்படவில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Mamata Banerjee
,
Niti Aayog
,
PM Narendra Modi

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை