நிதி ஆயோக் கூட்டம்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பு… மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

மம்தா பானார்ஜி

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் பட்ஜெட் பாகுபாடு நிறைந்ததாக இருப்பதாகவும், இந்த நடவடிக்கை அரசியலமைப்பு கொள்கைகளுக்கு விரோதமானது எனவும் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

விளம்பரம்இதையும் படிங்க: தாம்பரத்தில் கூடுதல் நடைமேடை பணிகள் விறுவிறுப்பு… துரிதமாக முடிக்க ரயில்வே திட்டம்!

இந்தநிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் அறிவித்துள்ளார். மம்தா பானர்ஜி டெல்லி செல்ல இருந்ததாகவும், அவரது பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Mamata Banerjee

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து