நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் சந்திப்பு

புதுடெல்லி,

டெல்லியில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்ரமராஜா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து விக்ரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"சாமானிய வணிகர்களை ஆன்லைன் தனியார் கம்பெனிகளிடம் இருந்து காப்பாற்ற, சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். மாநிலம் தழுவிய வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் நிதி மந்திரி ஆலோசனை நடத்த வேண்டும் எனவும், வெள்ளம், விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து 2 சதவீதத்தை எடுத்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்."

இவ்வாறு விக்ரமராஜா தெரிவித்தார்.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்