நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளோம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!

ஆந்திரத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்ததாகக் கூறி முந்தைய ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆட்சியை துணை முதல்வரான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அயோத்திக்கு அனுப்பிய திருப்பதி லட்டு: நன்கொடையாக வந்த 2,000 கிலோ நெய்!

இது தொடர்பாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ”மாநிலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

மக்கள் எங்களை நம்பி மிகப்பெரிய பொறுப்பினைத் தந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு தலைமையில் என்டிஏ கூட்டணியை சட்டப்பேரவைத் தேர்தலில் 160 தொகுதிகளிலும், மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் மக்கள் வெற்றிபெற வைத்தனர்’’ என்று கூறினார்.

தில்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி!

மேலும், பேசிய அவர், “இது எங்களுக்கு மிகப்பெரிய சவால். மக்கள் முந்தைய ஆட்சியின் மீது மிகவும் வெறுப்புடன் இருந்தனர். அந்த நேரத்தில் நாங்கள் போராடி ஆட்சி அமைத்துள்ளோம். நாங்கள் ஆட்சியமைத்ததும் ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனித்தோம்.

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் 16,437 ஆசிரியர் பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்புகள் தொடர்பான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. முந்தைய அரசு சொந்த நலனில் கவனமாக இருந்து வளர்ச்சியைப் புறக்கணித்தனர்’’ என்று பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து