நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடியால் தொடரை வென்றது இந்தியா!

நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடியால் இந்திய அணி தொடரை வென்றது.

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி தில்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். அதன்படி இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார்.

டெஸ்டில் அதிக 150* ரன்கள்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். அவருடன் வந்த அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

நிதீஷ் குமார் மிரட்டல்

கடந்த போட்டியில் அறிமுக வீரரான நிதீஷ் குமாரும், ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியில் மிரட்டினர். இவர்களின் அதிரடியால் 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தது. தனது இரண்டாவது போட்டியிலேயே 27 பந்துகளில் அரைசதம் விளாசினார் நிதீஷ் குமார் ரெட்டி. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதீஷ் குமார் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் பெவிலியன் திரும்பினார். நிதீஷ் குமார் மற்றும் ரிங்கு சிங் இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர்.

டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஹார்திக் பாண்டியா!

ரிங்கு சிங்

அவருக்குப் பின்னர் வந்த ஹார்திக் பாண்டியாவும் அதிரடியில் மிரட்டினார். தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்த ரிங்கு சிங் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ரியான் பராக் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, தன்சீம் அசன், முஸ்தபிசுர் ரகுமான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வங்கதேசம் தோல்வி

இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 36-வது முறையாகும்.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணியால் வெற்றியைப் பெறமுடியாமல் போனது.

தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 14 ரன்னிலும், பர்வேஸ் ஹொசைன் 16 ரன்னிலும் அவுட்டாக, கேப்டன் ஷாண்டோ 11 ரன்னிலும், மெஹதி ஹாசன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மஹ்மத்துல்லா 41 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் , அர்ஷ்தீப் சிங், சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா சார்பில் பந்து வீசிய 7 பந்துவீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக