நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உறவினர்கள் பலரும் பஸ்கோரியா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.

அங்கு நேற்று இரவு அனைவருக்கும் ’ஜால்பன்’ திண்பண்டம் உண்ணக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த பலருக்கும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய உடல்கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

இதனைத் தொடர்ந்து, 53 பேர் உடனடியாக அருகாமையிலிருந்த சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் ஜொராத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 150 பேருக்கு, சிறிய அளவிலான உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அவர்களின் வீடுகளில் வைத்தே அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி நகை, பணம் கொள்ளை!

மற்றவர்களுக்கு உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ விஸ்வஜித் புகான் மருத்துவமனைக்கு விரைந்து, அனைவரின் உடல்நிலை குறித்தும் நலம் விசாரித்தார்.

அதுமட்டுமின்றி அவர்களின் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி அனைவரின் உடல்நிலை குறித்தும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்