நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இலங்கை… டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

துபாய்,

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இலங்கை அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை (55.56 சதவீதம்) 3வது இடத்தில் தொடர்கிறது. தொடரை இழந்த நியூசிலாந்து (37.50 சதவீதம்) 4வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்தப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்தியா (71.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) அணிகள் உள்ளன. 4வது இடத்தில் இங்கிலாந்தும் (42.19 சதவீதம்), 5வது இடத்தில் வங்காளதேசமும் (39.29 சதவீதம்), 6வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் (38.89 சதவீதம்) உள்ளன. 8 மற்றும் 9வது இடங்களில் முறையே பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்; வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

வங்காளதேசத்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு.. காரணம் என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி