நியூசி. வீரர் ரச்சின் சதத்துக்கு பெங்களூரு ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் அக்டோபர் 16இல் தொடங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

2ஆம் நாளில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் நியூசி. சார்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் அடித்தார்.

இந்த சதம் ரச்சின் ரவீந்திராவுக்கு 2ஆவது டெஸ்ட் சதம். இந்தியாவில் 2012க்குப் பிறகு ஒரு நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சதம் அடிப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

ரச்சினின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி பெங்களூரைச் சேர்ந்தவர். அதனால் ரச்சின் சதத்துக்கும் ஆட்டமிழந்து செல்லும்போதும் பெங்களூரு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.

கே.எல்.ராகுல் ரச்சினை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.

Kuldeep finally gets the better of Rachin Ravindra!
The visitors finish with a mammoth 356-run lead #IDFCFirstBankTestTrophy#JioCinemaSports#INDvNZpic.twitter.com/ibbBwF3c9s

— JioCinema (@JioCinema) October 18, 2024

Related posts

Nayanthara SLAMS Cosmetic Surgery Rumours: ‘Burn Me, There’s No Plastic In Here’

Yashwantrao Chavan Centre To Represent India At The World Cities Day 2024 Global Conference In Shanghai

Tamil Nadu NEET UG 2024: Registration For Stray Round Counselling To End Today