நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்த தேவிஸ்ரீ பிரசாத், ஹனுமன்கைன்ட்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நியூயார்க்கில் உள்ள லாங் ஐலேண்டில் நடந்த 'மோடி அண்ட் யுஎஸ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராப் இசைக் கலைஞர் ஹனுமன்கைன்ட்டை சந்தித்தார்.

இலங்கை: என்ன செய்யப் போகிறார் புதிய அதிபர்?

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடியின் மூன்று நாள்கள் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, நாசாவ் கொலிசியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நாட்டின் பிரச்னையை தனிநபரால் தீர்க்க முடியும் என நம்பவில்லை: அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக

அந்த நிகழ்ச்சியில் ‘ஹனுமன்கைன்ட்’ என்றழைக்கப்படக் கூடியவரான சூரஜ் செருகட் என்ற ராப் இசைப் பாடகரையும் சந்தித்து உரையாடினார்.

கேரளத்தைப் பூர்விகமாகக் ஹனுமேன்கைன்ட் குரலில் ‘ஹனுமன்கைன்ட் – பிக் டாக்ஸ்’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் வைரலானது. யூடியூப்பில் மட்டும் 12 கோடிக்கும் அதிகமானப் பார்வைகளைப் பெற்றது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் இந்தப் பாடல் மிகவும் பிரபலம்.

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

பிரதமர் மோடி ஹனுமேன்கைன்டை கைகுலுக்கி மற்றும் கட்டிப்பிடித்து வரவேற்றார். மேலும், அவரை ஆரத்தழுவுவதற்கு முன்பு பிரதமர் மோடி ‘ஜெய் ஹனுமான்’ என்றும் முழக்கமிட்டார்.

பிக் டாக்ஸ், ரஷ் ஹவர், செங்கிஸ் மற்றும் கோ ட்டு ஸ்லீப் போன்ற பாடல்கள் மூலம் பெயர்பெற்ற ஹனுமன்கைன்ட், ஹிப்-ஹாப் இசையில் ஒரு முக்கியமான நபராக வேகமாக வளர்ந்து வருகிறார்.

இந்த நிகழ்வில் பாடகர் ஆதித்யா காத்வி மற்றும் தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கிய இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் உள்பட மற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய இசைக்கருவியான 'பறை'யையும் காட்சிப்படுத்தப்பட்டது.

பெங்களூருவில் ஒரு ஷ்ரத்தா மாடல் கொலை.. அதிர்ச்சி தரும் பின்னணி!

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி