நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றால்..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெறுமா?

நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் 5 பேர் டக் அவுட் ஆகினர்.

இதையும் படிக்க..:நியூசி.க்கு வேகமாக 100 விக்கெட்டுகள்..! சாதனை பட்டியலில் இணைந்த மாட் ஹென்றி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் 8 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அந்த 8 போட்டிகளில் நியூஸிலாந்துக்கு எதிராக உள்ள முதல் போட்டு உள்பட 5-ல் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல் உள்ளது.

இதையும் படிக்க..:சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் பிரபல வேகப் பந்துவீச்சாளர்!

முதல் டெஸ்டில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வரும் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலோ அல்லது டிரா செய்தாலோ மூன்றாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள நாள்கள் மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிந்தால், இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

மேலும், நியூஸிலாந்துக்கு எதிரானப் போட்டியில் 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் 5-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும். இல்லையெனில் லீக் சுற்றுடன் வெளியேறும்.

இதையும் படிக்க..:மிக மோசமான பேட்டிங்..! 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!