நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாதது குறித்தும், மத்திய நிதி மந்திரியாக தொடர்வது குறித்தும், தமிழ்நாடு எம்.பிக்களிடம் கேள்வி எழுப்புவது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இது தொடர்பாக வந்த புகாரை பதிவு செய்துகொண்ட தேசிய மகளிர் ஆணையம், கவிஞர் இனியவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

#BREAKING || மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்
தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு
கவிஞர் இனியவனின்… pic.twitter.com/0QhdDTaoy4

— Thanthi TV (@ThanthiTV) June 23, 2024

Related posts

23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு

ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்

கோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி…பரபரப்பு சம்பவம்