நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல்

கரூர்,

நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 16-ந்தேதி கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை, காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் கோர்ட்டில் மனு அளித்தனர்.

அப்போது 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக கரூர் காந்திகிராமத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் 2 நாள் விசாரணை முடிந்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் போலீஸ் காவலை வருகிற 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணைக்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர்.

Related posts

சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

செருப்பை கழற்ற கூறிய டாக்டருக்கு அடி, உதை; வைரலான வீடியோ