நிவாரண பொருள்களுடன் வெள்ள நீரில் சிக்கிய ஹெலிகாப்டர்!

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருள்கள் வழங்கச் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வெள்ள நீரில் சிக்கியது.

பிகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கச்சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அவசரமாக வெள்ள நீரில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவிட்டு ஹெலிகாப்டர் தர்பங்கா பகுதியில் வந்துகொண்டிருந்தது.

அப்போது அவுரை பகுதியில் உள்ள வெள்ள நீரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த அனைவரையும் அதிகாரிகள் வருவதற்குள் அருகில் இருந்தவர்கள் மீட்டனர்” என்றார்.

மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட குற்றவியல் நீதிபதி சுப்ரத் குமார் சென் கூறும்போது, “ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!