நீச்சல் குளத்தில் பிணமாகக் கிடந்த கால்பந்து வீரர்! கொலையா?

இங்கிலாந்தில் பிறந்த கிரீஸ் நாட்டின் சர்வதேச கால்பந்து அணி வீரர் ஜியார்ஜ் பால்டாக் சதன் ஏதேன்ஸின் கிலிஃபிடாவில் உள்ள தனது வீட்டின் நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார்.

அவர் பிணமாகக் கிடந்தது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “அவரது உடல் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவர் உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணி போல நீரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் உடலில் சந்தேகப்படும் படியான காயங்கள் எதுவும் இல்லை.

அவரை மீட்டு அவரது உயிரைக் காப்பாற்ற முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்” என்றனர்.

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை: ஐடி துறை பங்குகள் உயர்வு!

31 வயதான பால்டாக் 2009 ஆம் ஆண்டில் எம்கே டான் அணியில் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அந்த அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்.

அவர் 2017 இல் ஷெஃபீல்ட் யுனைடெட்டில் சேருவதற்கு முன்பு, நார்தாம்ப்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு யுனைடெட் உள்ளிட்ட பல கிளப்களிலும் விளையாடியுள்ளார்.

அவர் கிளப் அணிகளுக்காக 219 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் பிரீமியர் லீக்கிலும் விளையாடினார்.

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம்..!

பால்டாக் பக்கிங்ஹாமில் பிறந்தவர். ஆனால் மே 2022 இல் கிரீஸ் அணியில் சேர்ந்தார். பால்டாக் கிரீஸ் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் ஜார்ஜியாவுக்கு எதிராக விளையாடி இருந்தார்.

இவரது அணி பெல்ஃபாஸ்டில் உள்ள வின்ட்சர் பூங்காவில் நடந்த போட்டியில் வடக்கு அயர்லாந்திற்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபட உகந்த நேரம்!

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக