நீடா அம்பானியை வியந்து பாராட்டிய அமெரிக்க விருந்தினர்…

‘தனது குடும்பத்தினரைப் போன்று பார்த்துக் கொண்டார் நீடா அம்பானி…’ – வியந்து பாராட்டிய அமெரிக்க விருந்தினர்!

நீடா அம்பானியிடன் ஜூலியா சாஃப்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்தில் பங்கேற்ற அமெரிக்க விருந்தினரான ஜூலியா சாஃப் நீடா அம்பானியை வியந்து பாராட்டியுள்ளார்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஓராண்டாக உலகமே வியக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் 3 ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

நேற்று நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி, கே.எல். ராகுல், ரன்பிர் கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டை தோனி தனது மனைவியுடன் இணைந்து வாழ்த்தியுள்ளார். இவர்கள் 4 பேரும் இணைந்து எடுத்துள்ள ஃபோட்டோவை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு 13 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன.

விளம்பரம்

இந்த திருமண கொண்டாட்டத்தில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் விருந்தோம்பல் பண்பை உலகமே வியந்து பாராட்டுகிறது.

இதையும் படிங்க – அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டம்… மங்கள் உத்சவ் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

அனைத்து விருந்தினர்களையும் முக மலர்ச்சியுடன் இருவரும் வரவேற்று, திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்க வைத்தனர். சமீபத்திய ஆண்டுகளில் எந்தவொரு மேடையிலும் நடனம் ஆடாத ரஜினிகாந்த், இந்த திருமணத்தில் நடனமாடி மனதை கவர்ந்தார்.

இதேபோன்று திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் சிலருக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான அன்பளிப்புகளை அம்பானி குடும்பத்தினர் அளித்துள்ளனர்.

விளம்பரம்இதையும் படிங்க – மகனின் திருமணத்தில் கண்கலங்கிய முகேஷ் அம்பானி… இணையத்தை நெகிழ வைத்த வீடியோ!

அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தினரைப் போன்று நீடா அம்பானி தன்னை பார்த்துக் கொண்டதாக அமெரிக்காவிலிருந்து வந்த விருந்தினரான ஜூலியா சாஃப் வியந்து பாராட்டியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி