நீட் கேள்வி எண் 19 – டெல்லி ஐஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ரத்து உள்ளிட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வில் 19வது கேள்விக்கு இரண்டு விடைகள் சரியானவை என கருதி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து விவாதம் நடைபெற்றது. இதில் சரியான விடையை கண்டறிய 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க டெல்லி ஐஐடி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கான பதிலை, டெல்லி ஐஐடி இயக்குநர் நாளை பகல் 12 மணிக்குள் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் வழங்க தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. நீட் கேள்வி எண் 19 தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெற உள்ளது.

LIVE : நீட் கேள்வி எண் 19 – ஐஐடி குழுவை அமைப்பு https://t.co/GNhFoHvNsi

— Thanthi TV (@ThanthiTV) July 22, 2024

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்