நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்… பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
நீட் தேர்வு
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பதிலளிக்க, தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வில், ஒரே மையத்திலிருந்து அதிக மதிப்பெண்கள் பெற்றதாகவும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீட் தேர்வின் நம்பகத்தன்மையும், புனிதத்துவமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
விளம்பரம்
அதேநேரம், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் MBBS, BDS, ஆயுஷ் மற்றும் பிற தொடர்புடைய மருத்துவ படிப்புகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை எனப்படும் National Testing Agency அமைப்பு நடத்துகிறது.
இதையும் படிங்க – பிரதமாராக பொறுப்பேற்ற பின் மோடி போட்ட முதல் கையெழுத்து? என்ன தெரியுமா?விளம்பரம்
இந்த தேர்வுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை நீக்கி, முன்பிருந்த முறையில் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க – பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? வழிமுறைகள் இதோ!
நடப்பு ஆண்டில் மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Neet Exam
,
Supreme court