நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று முன்மொழிந்தார்.

அவர் முன்மொழிந்து பேசுகையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12வது வகுப்பு மதிபபெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டப்பேரவை ஒருமானதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்