நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன – பிரதமர் மோடி

நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதுதான் மூன்றில் ஒரு பங்கு ஆட்சியை முடித்துள்ளதாகவும் இன்னும் 3 இல் 2 பங்கு உள்ளதாகவும் கூறினார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, சுதந்திர இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஒரே கட்சியின் ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறினார். இது சாதாரண விஷயம் இல்லை என்றும் மக்கள் அளித்த முடிவை சிலர் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்ய முயல்வதாகவும் கூறினார்.

விளம்பரம்

தற்போதுதான் 10 ஆண்டுகால ஆட்சி முடிந்துள்ளதாகவும் மேலும், 20 ஆண்டுகள் மீதம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகள் வறுமைக்கு எதிரான தீர்க்கமான போராட்டமாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக இரண்டாவது இடம் பிடித்தது : மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்

மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பொய்யைப் பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Narendra Modi
,
Parliament
,
Parliament Session
,
PM Modi

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து