நீண்ட கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறி அசத்தியுள்ளது.

டிரினிடாட்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 56 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.

ஐ.சி.சி. 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் நீண்ட கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா