நெல்லை -சென்னை வந்தே பாரத் ரெயில் விபத்து: மாடு மீது மோதியது

தண்டவாளத்தில் நின்ற மாட்டின் மீது வந்தே பாரத் ரெயில் மோதியது.

மதுரை,

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் நேற்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் மாடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தண்டவாளத்தில் நின்ற மாட்டின் மீது வந்தே பாரத் ரெயில் மோதியது.

இதில் ரெயிலின் முகப்பு பகுதியில் இடது புறம் சேதமடைந்தது. மாடும் காயம் அடைந்தது. தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து வலது பக்கம் கூடுதலாக பிணைப்பு கம்பிகள் மூலம் அதனை தற்காலிகமாக இணைத்தனர். தொடர்ந்து ரெயில் மதுரைக்கு வந்து அங்கிருந்து சென்னையை நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி