நேபாளத்தில் ரூ.20 லட்ச பணத்துடன் 2 இந்தியர்கள் கைது

நேபாளத்தில் சட்டவிரோதமாக ரூ. 20 லட்ச மேல் பணத்தை எடுத்துச் சென்ற இந்தியர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நேபாள-இந்திய எல்லையில் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது, ​​மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் குரேசியா 33 மற்றும் உமேஷ் சகாரம் கந்தக்லே 39, ஆகிய இருவரும் கபில்வஸ்து மாவட்டத்தின் கிருஷ்ணாநகர் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்

அவர்களிடம் இருந்து எந்த ஆதாரமும் இல்லாமல் மொத்தம் ரூ. 20,50,000 போலீஸார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக கபில்வஸ்து மாவட்டத்தில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்திய நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட தனி வாகனங்களில் இருவரும் பயணம் மேற்கொண்டிருந்தனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.25,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்வது நேபாளத்தில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!