நேரு முதல் மன்மோகன் சிங் வரை.. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்கள்

நேரு முதல் மன்மோகன் சிங் வரை.. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர்கள்!

பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்கள்

இந்தியாவில், நிதியமைச்சர்கள் மட்டுமல்லாமல் பிரதமர்களும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். நிதியமைச்சர்களாக மாறி, பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேரு தான், நிதியமைச்சருக்கு பதிலாக முதன்முதலில் பட்ஜெட் தாக்கல் செய்தவர். 1958- ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த T.T. கிருஷ்ணமாச்சாரி, ராஜினாமா செய்ததால் நேரு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விதிமுறைகளை மீறி விற்றதில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதற்காக முந்த்ரா சிறைத் தண்டனை பெற்றார், இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானதால் டிடி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

விளம்பரம்

இரண்டாவதாக நேருவின் மகளான இந்திரா காந்தி 1970- ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். 1969- ஆம் ஆண்டு, நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகியதை தொடர்ந்து இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இதற்கு அடுத்தபடியாக 1987- ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதை தொடர்ந்து, நிதியமைச்சராக இருந்த வி.பி. சிங்கை அப்பொறுப்பிலிருந்து நீக்கியிருந்தார் ராஜீவ் காந்தி, இதன் காரணமாக பட்ஜெட்டை ராஜீவ் காந்தியே தாக்கல் செய்யும் சூழல் ஏற்பட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்… எவ்வளவு தொகை தெரியுமா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பி.வி. நரசிம்மராவ் காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார், மன்மோகன் சிங்கின் 1991 பட்ஜெட், இன்றளவும் இந்தியாவின் மிகச்சிறந்த பட்ஜெட்டாக கருதப்படுகிறது. பொருளாதார சுணக்கத்தை கண்டு வந்த நாட்டில், தாரளமயமாக்கல், தனியார்மயம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை மன்மோகன் சிங் கையிலெடுத்தார். மன்மோகன் சிங்கின் 1994- ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சேவை வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் அரசின் வருவாய் பெரும் அளவில் அதிகரித்தது.

விளம்பரம்

இவர்களை தவிர முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் 1959- ஆம் ஆண்டு முதல் 1963 வரை தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 1967- ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டுடன் 1967, 1968 மற்றும் 1969 வரவு செலவுத் திட்டங்களையும் அவர் தாக்கல் செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indira Gandhi
,
Jawaharlal Nehru
,
Manmohan Singh
,
Union Budget
,
Union Budget 2024

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்