நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்கு பாஜக மன்னிப்புக் கோர வேண்டும்: ஆம் ஆத்மி!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைப் போன்ற நேர்மையான தலைவரைச் சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆத் ஆத்மி தெரிவித்துள்ளது.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசினார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கு உச்ச நீதிமன்ற உத்தரவு கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்குப் பெரிய நிவாரணம்.

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது விவகாரம் மட்டுமல்ல, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அதன் சர்வாதிகாரத்தை நிறுத்த நீதிமன்றம் அளித்த பெரிய பாடம் என்றும் அவர் கூறினார்.

வரம் தரும் வாரம்

கேஜரிவாலை சிறையில் வைத்திருக்க பாஜக வேண்டுமென்றே நடத்திய நாடகம் தான் இது. அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகும் அவரை சிபிஐ கைது செய்தது. பாஜகவின் நோக்கத்தை சிபிஐ நிறைவேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் குற்றம் சாட்டினார்.

கூண்டுக் கிளி போல் செயல்படும் பாஜக

கேஜரிவாலுக்கு ஜாமீன் உத்தரவு பாஜகவின் முகத்தில் ஒரு பெரிய அடி. சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல் செயல்படுகிறது. ஆனால் அவரது திட்டம் அம்பலமாகிவிட்டதால் பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேஜரிவால் போன்ற நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியாணா மற்றும் தில்லி தேர்தல்களில் பாஜகவை ஆம் ஆத்மி தோற்கடிக்கும். கேஜரிவாலின்

எங்களுடன் இருப்பது எங்களுக்கு மேலும் பலத்தைக்கூட்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!

க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்படுவது முக்கியம்: மோடி

இன்றைய தினப்பலன்கள்!