நொய்டாவில் ஏசி வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

லக்னோ,

நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏர் கண்டிஷனர் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 100 இல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு அடுக்குமாடி குடியிருப்பில் பலர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் எந்த தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது என்று தகவல் வெளியாகவில்லை.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதுவரை, இந்த தீ விபத்தில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏர் கண்டிஷனரில் (ஏசி) தீப்பிடித்து பரவியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#WATCH | Uttar Pradesh: Fire broke out at Lotus Boulevard Society in Noida’s Sector 100.
(Video Source: Local resident) pic.twitter.com/d3tU4Y4hHx

— ANI (@ANI) May 30, 2024

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி