நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து எப்போது விமான சேவை?

நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து எப்போது விமான சேவை? சமீபத்திய தகவல்!

நொய்டா சர்வதேச விமான நிலையமானது அதன் விமான சேவையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதாவது 2025 ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நொய்டா விமான நிலையம் இந்த ஆண்டின் இறுதியில் அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக மேற்கண்ட காலக்கெடுவிற்குள் நொய்டா சர்வதேச விமான நிலையமானது செயல்பட தொடங்காது என சமீபத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ள உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள ஜெவார் பகுதியில் உள்ள நடைபெற்று வரும் இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளம்பரம்

இந்த சூழலில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக “தற்போதைய கட்டுமான நிலையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 2025 இறுதிக்குள் வணிக நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று விமான நிலையம் சார்பாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் எங்களின் EPC ஒப்பந்ததாரராக இருக்கும் பிரபல கட்டுமான நிறுவனமான டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிட்டட் மற்றும் இப்பணியுடன் தொடர்புடைய மற்ற ஒப்பந்ததாரர்கள் இணைந்து வேகமாக செயல்பட்டு வருகின்றனர். கட்டுமான பணிகளை விரைவுப்படுத்துவதும், விமான நிலையத்தைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை விரைந்து முடிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க பல விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும் operational readiness-க்கான பாதையில் முக்கியமான மைல்கற்களை நாங்கள் தொடர்ந்து கடந்து வருகிறோம். இது ஒரு பெரிய மற்றும் சிக்கலான திட்டமாகும். அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ள இருக்கும் கட்டுமான நடவடிக்கைகள் முக்கியமானவை என்று விமான நிலையம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக இது இருக்கும்.

விளம்பரம்

Also Read |
ஏர் ஹோஸ்டஸ் சம்பளம்: விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

மொத்தம் நான்கு கட்டங்களாக 5,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது. தற்போது விமான நிலையத்தின் முதல் கட்டப் பணிகளே நடைபெற்று வருகின்றன. இதனிடையே விமான நிலைய கட்டுமான பணிகளை கவனித்து வரும் திட்ட அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக விமான நிலையத்தில் ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு ஓடுபாதையும், ஒரு முனைய கட்டிடமும் அமைக்கப்படும் என்றனர். ஒப்பந்தத்தின்படி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதல் விமானம் இண்டிகோ விமானமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Airport
,
Noida
,
Trending

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து