பகலில் பிச்சைக்காரன் – இரவில் இப்படி ஒரு முகமா? அதிச்சியூட்டும் வீடியோ
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் கோயில்கள், தெருக்களில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், இப்போதெல்லாம் சாலையின் நடுவே சிக்னல்களில் பிச்சை எடுக்கிறார்கள். அத்துடன் முன்பெல்லாம் வறுமையின் காரணமாக பிச்சை எடுத்த நிலையில், தற்போது பிச்சை எடுப்பதையே தொழிலாக மாற்றிவிட்டனர். எந்த முதலீடும், உழைப்பும் இல்லாமல் பிச்சை எடுக்கும் தொழிலை ஆயிரக்கணக்கானோர் செய்து வருகின்றனர்.
இதைவிட பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதற்காக ஒரு குழுவை உருவாக்கி, பகுதிகளையும் தங்களுக்குள்ளே பிரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் வெறுமனே வறுமையை காட்டி பணம் கேட்பதை விட, பலரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டனர். உண்மையில் ஊனமுற்றவர்களாக இல்லாத நிலையில், உடல் ஊனமுற்றவர்கள் போல நடித்து பிச்சை எடுக்கிறார்கள். அவர்களிடம் மக்களும் கருணை காட்டி, சாப்பாடு மற்றும் பணம் கொடுக்கிறார்கள்.
விளம்பரம்
அந்த படத்தில் நடித்தது தான் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு – நயன்தாரா
மேலும் செய்திகள்…
இப்படி ஏமாற்றி பிச்சை எடுத்த பணத்தை சில பிச்சைக்காரர்கள் வங்கியில் முதலீடு செய்கிறார்கள். ஒரு சிலர் வட்டிக்கு விடுகிறார்கள். ஆனால், பெரும்பாலான நபர்கள் உல்லாசமாக இருப்பதற்காகவே பிச்சை எடுக்கிறார்கள். ஆம்! விலைமாதுக்களிடம் செல்லவும், மது குடிக்கவும் பெரும் தொகையை பல பிச்சைக்காரர்கள் செலவிடுகின்றனர். அப்படித்தான் ஒரு பிச்சைக்காரரின் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிச்சை எடுக்கும் ஒரு நபர், மாலையில் மதுக்கடையில் நின்று பிச்சை எடுக்கிறார் என்று பார்த்தால், தனது கையில் இருக்கும் பணத்தை கொடுத்து மது வாங்குகிறார். அந்த பிச்சைக்காரருக்கு பலமுறை தானம் செய்த நபர், இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
விளம்பரம்விளம்பரம்
அந்த வீடியோவில் பிச்சைக்காரர் ஒரு மதுபாட்டிலை வாங்கி தனது பைக்குள் வைத்துக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், உண்மையான பிச்சைக்காரர்களுக்கு யாரும் உதவுவதில்லை என்றும், இதுபோன்ற நபர்களுக்கே பலரும் உதவுவதாகவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதிலும் சிலர், இதுபோன்ற நபர்களால் தான் உண்மையில் கஷ்டப்படும் நபர்களுக்கு யாருமே உதவுவதில்லை என்று சாடியுள்ளனர்.
இதனிடையே, இந்தூரில் பிச்சை எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Trending
,
viral