பங்குச்சந்தை வணிகம் 2வது நாளாக சற்று உயர்வு!

பங்குச்சந்தை வணிகம் 2வது நாளாக உயர்வுடன் காணப்பட்டது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை சற்று ஏற்றத்துடன் முடிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 13.65 புள்ளிகள் உயர்ந்து 81,711.76 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.017சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7.15 புள்ளிகள் சரிந்து 25,017.75 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.029 சதவீதம் உயர்வாகும்.

பங்குச்சந்தை சென்செக்ஸ் 81,815.23 என்ற புள்ளிகளுடன் தொடங்கி பின்னர் 81,600.51 என்ற அளவுக்கு சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 81,919.11 என்ற அதிகபட்சத்தை எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 1 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் 2.07% ஏற்றத்துடன் நிலைப்பெற்றன. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஃபின்சர்வ் 1.95%, எல்&டி 1.67%, இன்ஃபோசிஸ் 1.28%, பஜான் ஃபைனானஸ் 1.26%, ஐசிஐசிஐ வங்கி 1.08% பங்குகள் உயர்திருந்தன.

இதேபோன்று டைட்டன் கம்பெனி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

நான்காவது நாளாக தங்கம் விலையில் மாற்றமில்லை: மக்கள் மகிழ்ச்சி!

மேலும் நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் எஸ்பிஐ லைஃப், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி லைஃப், எல்&டி, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் இருந்தன.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!