பங்குச் சந்தையில் ஊழல்? – கொளுத்திப் போட்ட ராகுல் – பதறும் பாஜக!
ராகுல் காந்தி
போலி கருத்துக் கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவர் அச்சத்தை உருவாக்க முயற்சிப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டும் என்றும் கூறியிருந்தார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜூன் 4ஆம் தேதிக்கு முன்பாகவே பங்குகளை வாங்கி விடுமாறும், பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொடப்போகிறது என்றும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
விளம்பரம்
இதற்கு அடுத்த நாளே இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் 76,739 புள்ளிகளையும், நிஃப்டி 23,339 புள்ளிகளையும் எட்டியதால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி பாஜக கூட்டணி 293 இடங்களை மட்டுமே வென்றதால், பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. ஒரே நாளில் சென்செக்ஸ் 4,389 புள்ளிகளும், நிஃப்டி 1,379 புள்ளிகளும் சரிந்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
விளம்பரம்
இதையும் படிக்க:
TDP, JDU மட்டுமல்ல.. அமைச்சர் பதவியை கேட்கும் கூட்டணி கட்சிகள்.. பாஜகவிற்கு தொடரும் நெருக்கடி..
இதையடுத்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, போலி கருத்துக் கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அவர்களின் வேலையா? என்றும் வினவினார்.
விளம்பரம்
போலி கருத்துக் கணிப்புகளுக்கும், தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பேரழகில் ரசிகர்களை மிரள வைக்கும் சமந்தாவின் சூப்பர் ஹாட் ஸ்டில்ஸ்…
மேலும் செய்திகள்…
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்தியின் கருத்துகளை நிராகரிப்பதாகவும், தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் தோல்வியின் விரக்தியின் காரணமாக, பங்குச் சந்தையை கூட ராகுல் காந்தி விட்டுவைக்கவில்லை என்றும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
PM Narendra Modi
,
Rahul Gandhi
,
stock market crash