பங்குச் சந்தையில் கடும் சரிவு: ரூ.9 லட்சம் கோடி இழப்பு! 29 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் 2வது வணிக நாளான இன்று (அக். 22) பங்குச் சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 24,500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பு ரூ. 453.7 லட்சம் கோடியிலிருந்து ரூ. 444.7 லட்சம் கோடியாகச் சரிந்தது.

ஒரு நிறுவனத்தின்பங்கு மட்டுமே உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 930.55 புள்ளிகள் சரிந்து 80,220.72 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.15% சரிவாகும்.

பங்குச்சந்தை தொடக்கத்தில் 81,155.08 புள்ளிகளாக சென்செக்ஸ் இருந்தது. ஆரம்பத்தில் படிப்படியாக உயர்ந்து 81,504.24 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும், பிற்பாதியில் 80,149.53 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 930.55 புள்ளிகள் சரிந்து 80,220 புள்ளிகளாக வணிகம் நிலைப்பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐசிஐசிஐ வங்கியின் பங்கு மட்டுமே 0.68% உயர்வுடன் காணப்பட்டது. எஞ்சிய அனைத்து நிறுவனங்களின் மதிப்பும் சரிவுடனே காணப்பட்டன.

அதிகபட்சமாக எம்&எம் நிறுவனத்தின் பங்குகள் -3.71% சரிந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல் -3.00%, எஸ்பிஐ -2.90%, டாடா மோட்டார்ஸ் -2.64%, இந்தஸ்இந்த் வங்கி -2.60%, பவர் கிரிட் -2.54%, என்டிபிசி -2.18%, மாருதி சுசூகி -2.08%, எல்&டி -2.06%, பஜாஜ் ஃபின்சர்வ் -2.04%, ரிலையன்ஸ் -1.89% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 24,472.10 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.25% சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 24,798.65 புள்ளிகளாக தொடங்கிய நிஃப்டி, 24,882.00 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோன்று 400 புள்ளிகள் சரிந்து 24,445.80 வரை சரிந்தது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். எனினும் வணிக நேரத் தொடக்கத்தில் 309 புள்ளிகள் சரிந்து 24,472 புள்ளிகளாக நிலைப்பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் சிட்டி யூனியன் வங்கி பங்குகள் 11.90% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக பாலி மெடிகியூர் 3.01%, வருண் பிவரேஜஸ் 2.79%, ஹிந்துஸ்தான் ஜிங்க் 2.37%, டியூப் இன்வஸ்மென்ட் 2.26%, வாப்கோ 0.87% உயர்ந்திருந்தன.

ஜிஆர்எஸ்இ, ஆம்பர் என்டர்பிரைசஸ், சென்சுரி டெக்ஸ்டைல்ஸ், பிஎன்பி, எச்.எஃப்.சி.எல் ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன.

முதலீட்டாளர்களுக்கு ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பு ரூ. 453.7 லட்சம் கோடியிலிருந்து ரூ. 444.7 லட்சம் கோடியாகச் சரிந்தது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சரிவுக்கு காரணம் என்ன?

செப்டம்பர் காலாண்டில் குறைந்த வருவாய் மற்றும் பங்குச்சந்தையின் நீட்டிக்கப்பட்ட மதிப்பீடு ஆகியவை பங்குச் சந்தை சரிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் பங்குச் சந்தை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவில்லை.

2024 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தல் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதற்றங்களும் பங்குச் சந்தையின் நிச்சயமற்றத் தன்மைக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!