பங்குச் சந்தையில் மோசடி செய்யப்பட்ட ரூ.32 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸார்

ஆவடி பகுதியில் இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு எனக்கூறி மோசடி செய்யப்பட்ட ரூ.32 லட்சம் பணத்தை மீட்டு, உரிய பொதுமக்களிடம் காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை ஒப்படைத்தார்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் புகார் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களைப் பெற்ற அவர், அவற்றை இணையவழி குற்றப்பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூடுதல் துணை ஆணையர் அர்னால்டு ஈஸ்டர் மற்றும் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மகாலட்சுமி, பிரவின்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பொதுமக்களிடமிருந்து பணம் பறித்த மோசடி நபர்கள் 2024- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 21 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர், போலீஸார் மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு எனக்கூறிய லிங்குகளில் பணத்தை இழந்த 10 பேருக்கு ரூ.31.67 லட்சம் மீட்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை வழங்கினார். இவற்றைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள், ஆணையர் கி.சங்கர் உள்ளிட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related posts

Indian Railways Transports 3 Crore Passengers In 24 Hours On November 4; Over 7,600 Special Trains Operated During Festive Rush

Mumbai: Kasara Train Derailment Delays Multiple Long-Distance Trains, Services Restored

Daily Horoscope for Thursday, November 07, 2024, for all zodiac signs by astrologer Vinayak Vishwas Karandikar