பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி,

சிறு சில்லறை முதலீட்டாளர்களின் இழப்பில் லாபம் ஈட்டும் 'பெரிய நிறுவனங்களின்' அடையாளங்களை வெளியிடுமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், "பங்குகளில் விலையை முன்பே தீர்மானித்து செய்யப்படும் கட்டுப்பாடற்ற வணிகமானது, 5 ஆண்டுகளில் 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 90 சதவீத சிறு முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். வணிகத்தில் லாபம் ஈட்டும் பெரிய புள்ளிகளை உருவாக்குபவர்கள் என அழைக்கப்படுபவர்களின் பெயர்களை செபி வெளியிட வேண்டும்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கும் செபிக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது, எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செபி தலைவர் மாதபி பூரி புக்கை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 12 வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 85 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி நேற்று 26,011 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Uncontrolled F&O trading has grown 45x in 5 years.
90% of small investors have lost ₹1.8 lakh Cr in 3 years.
SEBI must reveal the names of the so called “Big Players” making a killing at their expense.

— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2024

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!