பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவு: ஐடி, வங்கித் துறை பங்குகள் உயர்வு

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 14) பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிந்தது.

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி நிலைப்பெற்றது.

அதிகபட்சமாக விப்ரோ, டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி லைஃப், எல்&டி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி பட்டியலில் அதிகபட்சமாக உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 591.69 புள்ளிகள் உயர்ந்து 81,973.05 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.73% உயர்வாகும்.

21 நிறுவனப் பங்குகள் ஏற்றம்

வணிக நேரத் தொடக்கத்தில் 81,576.93 புள்ளிகளாகத் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 82,072.17 வரை உயர்ந்தது. இதேபோன்று 81,541.20 என்ற அதிகபட்ச சரிவையும் சந்தித்தது. எனினும் வணிக நேர முடிவில், 591 புள்ளிகள் சரிந்து 81,973 ஆக சென்செக்ஸ் முடிந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 9 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக டெக் மஹிந்திரா பங்குகள் 2.76% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக எச்டிஎஃப்சி வங்கி 2.25%, எல்&டி 2.09%, ஐடிசி 1.80%, இந்தஸ்இந்த் வங்கி 1.70%, கோட்டாக் வங்கி 1.51%, இன்ஃபோசிஸ் 1.23%, எச்டிஎல் டெக் 0.89%, ஐசிஐசிஐ வங்கி 0.72%, எஸ்பிஐ 0.68% உயர்ந்திருந்தன.

இதையும் படிக்க | தொழிலக உற்பத்தியில் 2 ஆண்டுகள் காணாத சரிவு

இதேபோன்று மாருதி சுசூகி பங்குகள் -1.87% சரிந்திருந்தன. இதுவே இன்றைய அதிகபட்ச சரிவாகும். இதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல் -1.46%, பஜாஜ் ஃபைனான்ஸ் -1.28%, அல்ட்ராடெக் சிமெண்ட் -1.06%, ஆக்சிஸ் வங்கி -0.70%, பஜாப் ஃபின்சர்வ் -0.50% சரிவுடன் காணப்பட்டன.

ஐடி, வங்கித் துறை ஏற்றம்

தேசிய பங்குச் சந்தை குறியீட்டி எண் நிஃப்டி 163.70 புள்ளிகள் உயர்ந்து 25,127.95 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. மொத்த வணிகத்தில் இது 0.66% உயர்வாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 25 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி நிஃப்டி வணிகமானது. இன்றைய நாளின் அதிகபட்சமாக 25,159.75 புள்ளிகள் வரை நிஃப்டி உயர்ந்தது. எனினும், பிற்பாதியில் 25,017.50 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 25,127.95 புள்ளிகளாக வணிகம் நிலைப்பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில், அப்டஸ் வேல்யூ, பிஎஸ்இ, சி.டி.எஸ்.எல்., ஃபினோலென்ஸ், ரேமண்ட், ஃபெடரல் வங்கி, கல்யாண் ஜுவல்லர்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று அவென்யூ சூப்பர் மார்ட், டாடா கெமிக்கல்ஸ், சரிகம இந்தியா, கோல்கேட், ஜேபி பவர், ஐஜிஎல், இந்தியன் எனர்ஜி, ஜஸ்ட் டையல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது