2 நாள்கள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு பங்குச் சந்தை வணிகம் இன்று (அக். 30) சரிவுடன் முடிந்தது.
நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் தொடங்கியது. இந்த தொடக்கம் முடிவு வரை நீடித்தது. சென்செக்ஸ் 426 புள்ளிகளும் நிஃப்டி 126 புள்ளிகளும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 426.85 புள்ளிகள் சரிந்து 79,942.18 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது மொத்த வணிகத்தில் 0.53% சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126 புள்ளிகள் சரிந்து 24,340.85 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.51% சரிவாகும்.
18 நிறுவனப் பங்குகள் சரிவு
வணிகத்தின் தொடக்க நேரத்தில் சற்று சரிந்து 80,237.85 புள்ளிகளுடன் தொடங்கிய வணிகம், 79,821.99 புள்ளிகள் வரை சரிந்தது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். இதேபோன்று அதிகபட்சமாக 80,435.61 புள்ளிகள் வரை ஏற்றம் பெற்றது. வணிக நேர முடிவில் 426 புள்ளிகள் சரிந்து 79,942.18 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக மாருதி சுசூகி நிறுவனப் பங்குகள் 1.91% உயர்வுடன் காணப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக இந்தஸ்இந்த் 1.76%, அதானி போர்ட்ஸ் 1.72%, அல்ட்ராடெக் சிமெண்ட் 0.84%, எல்&டி 0.82%, டைட்டன் கம்பெனி 0.77%, ஐடிசி 0.74%, நெஸ்ட்லே இந்தியா 0.40%, ரிலையன்ஸ் 0.30%, எச்.யூ.எல்., 0.29%, டிசிஎஸ் 0.24%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.13% ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.
இதேபோன்று இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் -2.03% சரிவுடன் இருந்தன. எச்சிஎல் -1.77%, ஐசிஐசிஐ வங்கி -1.48%, கோட்டாக் வங்கி -1.46%, எம்&எம் -1.43%, ஆக்சிஸ் வங்கி -1.39%, எஸ்பிஐ -1.24%, சன் பார்மா -1.05%, எச்டிஎஃப்சி வங்கி -0.99%, பஜாஜ் ஃபைனான்ஸ் -0.97% சரிந்திருந்தன.
நிஃப்டியில் சரிவு
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கேப்ரி குளோபல் நிறுவனப் பங்குகள் 14.20% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக டேட்டா பேட்டர்ன்ஸ் 12.50%, பூனவல்லா ஃபைனான்ஸ் 10.70%, ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் 10.10%, ரெடிங்டன் 9.70%, கோதாவரி பவர் 8.91%, பாலி மெடிகியூர் 8.59% உயர்வுடன் காணப்பட்டன.
நிஃப்டி பட்டியலில் வங்கி, ஆட்டோ, நிதித் துறை, ஐடி, மருத்துவத் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் எதிர்மறையாக இருந்தன. மீடியா, மெட்டல், ரியாலிட்டி துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.