பச்சைக் கிளிகளுக்கு பர்த்டே ட்ரீட்… ஆர்வலரின் அசத்தல் செயல்…

பச்சைக் கிளிகளுக்கு பர்த்டே ட்ரீட்… ஆர்வலரின் அசத்தல் செயல்…

பச்சைக் கிளிகளுக்கு பர்த்டே ட்ரீட்… ஆர்வலரின் அசத்தல் செயல்…

காடு, ஆறு, கடல், மண் வளம், மரங்கள் என இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் ஏராளம். இவற்றில் பறவைகளும் அடங்கும். பொதுவாக இயற்கை ஆர்வலர்கள் என்பவர்கள் தாவரங்கள், பறவைகள் மற்றும் பிற இயற்கை நிகழ்வுகளை மிகவும் விரும்ப கூடியவர்களாக, இயற்கையை பெரிதும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.

மனித வாழ்க்கைக்கும் – இயற்கைக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆழமாக சிந்திப்பவர்களாகவும், மனிதர்களும் இயற்கையும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் ஒருவர், தனது பிறந்தநாளில் கிளிகளின் கூட்டத்திற்கு பிறந்தநாள் விருந்து வைத்துள்ள சம்பவம் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ராமச்சந்திரபுரம் பகுதியில் உள்ள அன்னைப்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் டோரா பாபு. இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: ஆரோக்கிய விரும்பிகளின் ஆல்டைம் ஃபேவரைட்… மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்…

இவர் தனது சிறுவயதில் இருந்தே இயற்கை மற்றும் பறவைகளை நேசிக்கும் மனிதராக வளர்ந்துள்ளார். விலங்கு பிரியரான இவர் தனது சிறு வயது முதலே விலங்குகள், பறவைகள், குறிப்பாக கிளிகளுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய இவர், தான் பெரிதும் நேசிக்கும் பறவை இனமான கிளிகளுக்கு பர்த்டே ட்ரீட் வைத்துள்ளார். ஆம், வழக்கமாக உணவுக்காக தன்னை தேடி வரும் கிளிகளுக்கு இவர் தனது பிறந்தநாளில் சிறப்பு உணவு வழங்கியுள்ளார்.

விளம்பரம்

தன்னை தேடி வரும் கிளிகளுக்கு இவர் தினமும் அரிசி, மேஸ் (maze) மற்றும் ஜாவர் (Jawar) பீஸ்களை வழக்கமாக கொடுப்பதாக கூறியிருக்கும் டோரா பாபு, தனது பிறந்தநாளில் கிளிகளுக்கு சிறப்பு விருந்து அளிக்க விரும்பியதாக கூறி உள்ளார். இவர் தனது பர்த்டே ட்ரீட்டாக கிளிகளுக்கு தினசரி வழக்கமான உணவோடு ஸ்பெஷலாக பழங்கள், நட்ஸ்களை உணவாக வழங்கி உள்ளார்.

ஸ்பெஷல் உணவை கிளிகள் மோப்பம் பிடித்ததோ அல்லது ட்ரீட் சாப்பிட்ட கிளிகள் தனது வேறு சில சகாக்களுக்கு சொன்னதோ தெரியவில்லை, வழக்கத்தை விட சுமார் 150-க்கும் மேற்பட்ட கிளிகள் டோரா பாபு அளித்த பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றுள்ளன. வழக்கத்தை விட அதிக கிளிகள் மற்றும் தன்னிடம் இதுவரை பேசாத மற்றும் பழகாத கிளிகள் கூட இந்த விருந்தில் பங்கேற்றதாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் டோரா பாபு கூறி உள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க:செப்.14 தான் கடைசித் தேதி… ஆதார் வாங்கி 10 ஆண்டு ஆனவர்களுக்கு அரசு அறிவிப்பு…

பறவைகளுக்கு வசிப்பிடம் மற்றும் உணவு கொடுக்க, டோரா பாபு தனது வீட்டின் மொட்டை மாடியில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக தன் வீட்டின் மொட்டைமாடி சுவரில் பிரத்யேகமாக மர மேசைகளை அமைத்தார். பறவைகள் இயற்கையின் ஒரு பகுதி. எனவே என்னால் முடிந்த வரை அவற்றை பாதுகாக்க மற்றும் உணவளிக்க விரும்புகிறேன்.

இதற்கு முன்பு நாங்கள் ஊரில் குடியிருந்தோம். அப்போது பறவைகளுக்கு உணவு கொடுக்க அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு செல்வேன். ஆனால் தற்போது இந்த இடத்திற்கு வந்த பிறகு பறவைகளுக்கு உணவளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்தேன் என டோரா பாபு கூறினார். விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கையை பாதுகாக்க சேவை செய்து வரும் டோரா பாபுவின் பணிகளை அவர் வசிக்கும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
birthday
,
Local News

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!