பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைப்பா..? ஆவின் நிர்வாகம் விளக்கம்

பச்சை நிற பால் பாக்கெட்டின் அளவைக் குறைத்து விலையை உயர்த்தியதாக சர்ச்சை எழுந்தது.

சென்னை,

ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டின் அளவைக் குறைத்து விலையை உயர்த்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் புதிய வகை பால் விற்பனை தொடங்கவில்லை என்றும் ஆவின் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும், பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11