படத்தில் சர்ச்சை காட்சி: நடிகர் பிரபாசுக்கு வக்கீல் நோட்டீஸ்

கல்கி 2898 ஏடி படத்தில் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், 15 நாட்களில் உலகம் முழுவதும் ரூ,1,000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

தற்போது 'கல்கி 2898 ஏடி’ படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக பிரபாஸ், அமிதாப்பச்சன் மற்றும் இயக்குனருக்கு கல்கிதாம் மடாதிபதியான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். படத்தில் வரும் கல்கி அவதாரம் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டு இருப்பதற்கு முரணாக படம் இருப்பதாகவும், இது தவறானது என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!