படுகர் இன முறைப்படி நடந்த சாய் பல்லவி தங்கை திருமணம்; வைரலாகும் நடன வீடியோக்கள்!

படுகர் இன முறைப்படி நடந்த சாய் பல்லவி தங்கை திருமணம் நடைபெற்று உள்ளது. இதில் நடிகை சாய்பல்லவி நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றார். சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்தாண்டு ஜனவரி 21ல் வினீத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி பூஜா திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்வில் நடிகை சாய்பல்லவியின் புகைப்படங்கள் நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி தெலுங்கில் தண்டேல் படத்திலும் நடிக்கிறார். கார்கி, விராட பருவம் படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது குறித்து சாய் பல்லவி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்கள். சாய் பல்லவி ரன்பீர் கபீருடன் இணைந்து ராமாயணம் படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவர் கார்கி, மாரி 2, என்.ஜி.கே போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் அமரன் என்கிற தமிழ் படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். அமரன் திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

View this post on Instagram

A post shared by saipallavi (@saipallavi_dhf_girl)

Original Article

Related posts

இணையத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வேதனைப்பதிவு

கோட் படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலின் வீடியோ வெளியானது

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மாரி செல்வராஜ் நிதியுதவி