பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்றால்? நிர்மலா சீதாராமன் பதிலடி

பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்றால்…? நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில்

நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் இல்லை என்றால் அந்த மாநிலத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில், பிகார், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களை மட்டுமே குறிப்பிட்டு நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பிற மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டும் நிலையில், எந்த மாநிலத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது என விளக்கம் தந்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
முதன்முறை பணிக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை… பட்ஜெட்டில் அறிவிப்பு

பழைய வரி விதிப்பு முறையை நீக்குவது குறித்து தற்போது எந்த கருத்தும் கூற முடியாது என்றும் வரி விதிப்பை எளிமையாக்குவதே நோக்கம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் தந்துள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் நோக்கத்துடன் வரி வலையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விளம்பரம்

முன்னதாக, தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதோடு, நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Budget 2024
,
Nirmala sitaraman
,
Tamilnadu

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி