“பணம் இருந்தால் எந்த தேர்வையும் விலைக்கு வாங்கலாம்” – ராகுல் காந்தி

“பணம் இருந்தால் எந்த தேர்வையும் விலைக்கு வாங்கலாம்” – ராகுல் காந்தி ஆவேசம்!

ராகுல் காந்தி

நீட் தேர்வு மட்டுமன்றி பணம் இருந்தால் எந்த தேர்வையும் விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவையில் நீட் தொடர்பான விவாதம் அனல் பறந்தது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நீட் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து தேர்விலும் பிரச்னை இருப்பதாக ராகுல் விமர்சித்தார்.

நீட் தேர்வில் மட்டுமல்ல, அனைத்து முக்கியத் தேர்வுகளிலும் நமது தேர்வு அமைப்பு முறையில் மிகக் கடுமையான சிக்கல்கள் உள்ளன என்பது நாடு முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. நீட் தேர்வு முறை ஒரு மோசடி.

விளம்பரம்

லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்ற நிலையை தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்” என்று சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார்.

இந்திய போட்டித் தேர்வு முறையே மோசடியானது எனவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: ஃபேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட உலகப் பிரபலங்கள்… எலான் மஸ்க் பகிர்ந்த AI வீடியோ!விளம்பரம்

நீட் தேர்வு என்பது மிகப் பெரிய மோசடியாக மாறிவிட்டது என்றும், மிகப்பெரிய முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக குரல் எழுப்பினர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rahul Gandhi

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி