பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கைது

பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கோபால் ஜோஷி மற்றும் விஜயலட்சுமி ஜோஷி மீது முன்னாள் எம்எல்ஏ தேவவந்த் பூல் சிங் சவானின் மனைவி சுனிதா சவான் பசவேஸ்வராநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனது குடும்பத்தினருக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி கோபால் ஜோஷி தன்னிடம் ரூ.2 கோடி மோசடி செய்தார்.

அப்போது விஜயலட்சுமி தான் பிரகலாத் ஜோஷியின் சகோதரி என தன்னை அறிமுகம் செய்துகொண்டதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை இரவு இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கோபாலின் மகன் அஜய் ஜோஷியின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

தயவுசெய்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: இளநிலை மருத்துவர்களுக்கு மமதா கோரிக்கை

இந்த நிலையில் இவ்வழக்கில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி பெங்களூருவில் சனிக்கிழமை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தனக்கு சகோதரி கிடையாது, மூன்று சகோதரர்கள் மட்டுமே என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர்களில் ஒருவர் 1984 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தின் அகமதுநகரில் நடந்த சாலை விபத்தில் பலியானார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity